1960
சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார். உலக நாடொன்றின் முதலாவது பெண் ஜனாதிபதி ஆவார்.
1925
அமெரிக்காவில் டென்னிசி மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் படிவளர்ச்சிக் கொள்கையை வகுப்பில் கற்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
1944
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1944
இரண்டாம் உலகப் போர்: ஜுலை 20 இல் கிட்லரை கொலை செய்யத் திட்டமிட்டவர்கள் பெர்லினில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1952
கலிபோர்னியாவின் தெற்கே 7.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
1954
ஜெனீவா மாநாட்டில் வியட்நாம், வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1961
மனிதரை விண்ணுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணம் சென்றார்.
1964
சிங்கப்பூரில் மலாய் மற்றும் சீனர்களுக்கிடையே கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
1969
நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார்.
1970
11 ஆண்டுகளின் பின்னர் எகிப்தில் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்பட்டது.
1972
வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் ஐரியக் குடியரசுப் படையினர் நடத்திய 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் காயமடைந்தனர்.
1976
அயர்லாந்துக்கான பிரித்தானியத் தூதுவர் ஐரியக் குடியரசுப் படையினரால் கொல்லப்பட்டார்.
1977
நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.
1983
குடியிருப்புப் பகுதி ஒன்றில் உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை −89.2 °C (−128.6 °F) அந்தாட்டிக்காவில் வசுத்தோக் நிலையத்தில் பதியப்பட்டது.
1995
சீனக் குடியரசின் வடக்குப் பக்கக் கடற்பகுதி மீது மக்கள் விடுதலை இராணுவம் எறிகணைகளை வீசியது.
2001
ஜப்பான், ஒக்கூராவில் பாதசாரிகளின் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.
2008
ராம் பரன் யாதவ் நேபாளத்தின் முதலாவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011
நாசாவின் விண்ணோடத் திட்டம் அட்லாண்டிசு தரையிறங்கியதுடன் நிறைவு பெற்றது.















