1960
சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகத் தெரிவானார். இவரே உலகில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.
1979
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
1807
பிரான்ஸின் முதலாம் நெப்போலியன் உலகின் முதலாவது உள் எரி பொறிக்கான காப்புரிமையை யோசெப் நிசிபோர் நியெப்சிற்கு வழங்கினார்.
1810
பொகோட்டாவின் குடிமக்கள் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.
1831
செனெக்கா, சானீ அமெரிக்கப் பழங்குடிகள் மேற்கு ஒகையோவில் உள்ள தமது நிலங்களை மிசிசிப்பி ஆற்றின் மேற்குப் பகுதியின் 60,000 ஏக்கர் நிலங்களைப் பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்தனர்.
1871
பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.
1903
போர்ட் நிறுவனம் தனது முதலாவது தானுந்தை ஏற்றுமதி செய்தது.
1917
முதலாம் உலகப் போர்: யூகோசுலாவிய இராச்சியத்தை உருவாக்கும் உடன்பாடு செர்பிய இராச்சியத்திற்கும் யூகோசுலாவ் குழுவிற்கும் இடையில் எட்டப்பட்டது.
1920
பாரிசு அமைதி உடன்பாட்டிற்கமைய, கிரேக்க இராணுவம் சிலிவ்ரி நகரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1923 இல் அந்நகரைத் துருக்கியிடம் இழந்தது.
1922
உலக நாடுகள் சங்கம் ஆப்பிரிக்காவில் டோகோலாந்தை பிரான்சுக்கும், தங்கனீக்காவை ஐக்கிய இராச்சியத்துக்கும் வழங்கியது.
1932
புருசிய இராணுவப் புரட்சியை அடுத்து ஜேர்மனிய அரசுத்தலைவர் புருசிய அரசைக் கலைத்தார்.
1935
மிலனில் இருந்து பிராங்க்ஃபுர்ட் சென்ற விமானம் சுவிட்சர்லாந்து மலையில் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
1940
டென்மார்க் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.
1944
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனிய இராணுவத் தளபதி ஒருவனால் கிட்லர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பினார்.
1949
19 மாதப் போரின் முடிவில் இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டன.
1951
யோர்தான் மன்னர் முதலாம் அப்துல்லா எருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1954
மேற்கு ஜேர்மனியின் உளவுத்துறைத் தலைவர் ஒட்டோ ஜோன் கிழக்கு ஜேர்மனிக்குத் தப்பிச் சென்றார்.
1962
கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.
1964
வியட்நாம் போர்: வியட்கொங் படைகள் “காய் பே” நகரைத் தாக்கி 11 தென் வியட்நாமியப் படையினரையும் 40 பொதுமக்களையும் கொன்றனர்.
1969
அப்பல்லோ திட்டம்: நாசாவின் அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதல் மனிதர்களாக சந்திரனில் காலடி வைத்தனர்.
1969
உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் ஒண்டுராசுக்கும் எல் சல்வதோருக்கும் இடையே இடம்பெற்ற கலவரங்களை அடுத்து ஆரம்பித்த 6நாள் போர் முடிவுக்கு வந்தது.
1974
சைப்பிரசில் அரசுத்தலைவர் மூன்றாம் மக்காரியோசுக்கு எதிராக கிரேக்க ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து துருக்கியப் படைகள் அங்கு முற்றுகையிட்டன.
1976
அமெரிக்காவின் வைக்கிங் 1 விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
1977
அமெரிக்கா, பென்சில்வேனியா, யேம்சுடவுன் நகரில் இடம்பெற்ற பெர்ம் வெள்ளத்தில் 84 பேர் உயிரிழந்தனர்.
1980
இஸ்ரேலின் தலைநகராக எருசலேம் நகரை ஐ.நா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐ.நா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.
1982
ஐரியக் குடியரசுப் படையினரால் இலண்டனில் நடத்தப்பட்ட இரு வெடிகுண்டுத் தாக்குதல்களில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 47 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
1985
நெதர்லாந்து அண்டிலிசுவில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை அரூபா அரசு கொண்டுவந்தது.
1989
பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1992
செக்கோசிலோவாக்கியாவின் பிரதமர் வாக்லாவ் அவொல் பதவி விலகினார்.
1997
இலங்கையின் மூதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஈ. எச். மகரூப் மற்றும் ஐவர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
2005
கனடாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது.
2012
அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் திரையரங்கு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சி சூட்டு நிகழ்வில் 12 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.
2013
கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படைப் போராளிகளின் தாக்குதலில் 17 அரசுப் படையினர் கொல்லப்பட்டனர்.
2015
ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் கியூபாவும் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.















