• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது; மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது – மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
July 17, 2025
in இலங்கை செய்திகள்., வரலாற்றில் இன்று
0
பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது; மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது – மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1911
யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக “யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது.

1979
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

1902
வில்லிசு கேரியர் முதலாவது குளிரூட்டியை நியூயோர்க்கில் உருவாக்கினார்.

1917
பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் மட்டுமே வின்சர்ரென்ற பெயரைப் பெறுவார்கள் என்ற ஆணையை ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பிறப்பித்தார்.

1918
போல்செவிக்குகளின் உத்தரவின் பேரில் ரஷ்யப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசும் அவரது முழுக் குடும்பத்தினரும் எக்கத்தரீன்பூர்க் நகரில் கொல்லப்பட்டனர்.

1918
டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கர்பாத்தியா என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் ஜேர்மானிய யூ-55 மூழ்கடிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1932
நாட்சிக் குழுக்களுக்கும், எசுஎசு, எஸ்ஏ, மற்றும் ஜேர்மானியக் கம்யூனிசக் கட்சி உறுப்பினரக்ளுக்கும் இடையே கலவரம் மூண்டது.

1936
எஸ்ப்பானிய உள்நாட்டுப் போர்: எஸ்ப்பானியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

1944
இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் உயிரிழந்தனர்.

1945
இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், ஹாரி எஸ். ட்ரூமன், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க ஜேர்மனியின் போட்சுடாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர்.

1953
அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 44 பேர் உயிரிழந்தனர்.

1955
வால்ட் டிஸ்னி கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார்.

1967
நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் “சைனஸ் மெடை” என்ற இடத்தில் மோதியது.

1968
ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் ஜனாதிபதி அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது அசன் அல்-பாக்கர் தலைவரானார்.

1973
ஆப்கானித்தான் மன்னர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.

1975
அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுசு விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.

1976
கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாயின. இனவொதுக்கல் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.

1976
கிழக்குத் திமோர் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டு, அதன் 27ஆவது மாகாணமானது.

1979
நிக்கராகுவா அரசுத்தலைவர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.

1981
அமெரிக்காவில் கேன்சசு நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் உயிரிழந்தனர்.

1984
ஐக்கிய அமெரிக்காவில் மது அருந்துவோருக்கான குறைந்த பட்ச வயது 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது.

1989
திரு ஆட்சிப்பீடத்திற்கும் போலந்துக்கும் இடையே உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.

1994
பிரேசில் இத்தாலியை வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தைப் பெற்றது.

1996
நியூயோர்க்கில் லோங் தீவில் பாரிசு சென்றுகொண்டிருந்த போயிங் 747 அமெரிக்க விமானம் வெடித்துச் சிதறியதில் அனைத்து 230 பேரும் உயிரிழந்தனர்.

1998
பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 2,700 பேர் உயிரிழந்தனர்.

1998
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.

2000
பாட்னாவில் அலாயன்ஸ் ஏர் வானூர்தி 7412 செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அண்மித்தபோது, குடியிருப்புப் பகுதியில் மோதியதில் 60 பேர் உயிரிழந்தனர்.

2001
ஜூலை 2000 விபத்தின் பின்னர் கான்கோர்டு மீண்டும் சேவையில் விடப்பட்டது.

2006
இந்தோனேசியா, ஜாவாவில் 7.7 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 668 பேர் உயிரிழந்தனர்.

2006
இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2007
பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் உயிரிழந்தனர்.

2014
ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைன் – ரஷ்ய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.

2015
ஈராக், தியாலாவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர்.

Related Posts

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பாம்.!

புலிகள் பாவித்த ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பாம்.!

by Mathavi
June 30, 2026
0

தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை நேற்று திங்கட்கிழமை(29) மாலை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

மாத்தளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை...

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

by Mathavi
June 30, 2026
0

கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த ஆலை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து, ஆறு சந்தேகநபர்களை...

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இரண்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு.!

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இரண்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ரிதீமாலியத்த - குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில்...

வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு.!

வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

நேற்று (29) காலை 7.00 மணியளவில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் செனன் (Shannon) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், தாயைப் பிரிந்திருந்த சிறுத்தை குட்டி...

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

by Mathavi
June 30, 2026
0

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...

கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

கொழும்பு, கடுவெலை பிரதேசத்தில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

இன, மதவாத மோதல்களுக்கு இலங்கையில் இனி இடமில்லை.!

இன, மதவாத மோதல்களுக்கு இலங்கையில் இனி இடமில்லை.!

by Mathavi
June 30, 2026
0

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து நாட்டைச் சீர்குலைத்த யுகம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 30, 2026
0

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திவெவ பகுதியில், நேற்று (29) திங்கட்கிழமை தொல்பொருள் மதிப்புமிக்க செம்பு பாத்திரம் மற்றும் இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஜயந்திவெவ பகுதியை...

அரசின் பழிவாங்கும் பட்டியலில் எனது பெயரும் உண்டு.!

அரசின் பழிவாங்கும் பட்டியலில் எனது பெயரும் உண்டு.!

by Mathavi
June 30, 2026
0

சில குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை உற்று நோக்கினாலே, அடுத்த 6 மாத காலப்பகுதியில் யார் சிறைக்குச் செல்லப் போகின்றார்கள் என்பதை மிகத் துல்லியமாக அறியமுடிகின்றது என்றும், அவ்வாறு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி