• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

திசைகாட்டி அரசு வாக்குறுதிகளை மீறித் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது – சஜித் சாடல்..!

admin by admin
July 1, 2025
in இலங்கை செய்திகள்.
0
திசைகாட்டி அரசு வாக்குறுதிகளை மீறித் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது – சஜித் சாடல்..!
Share on FacebookShare on Twitter

“அநுர தலைமையிலான திசைகாட்டி அரசு வாக்குறுதிகளை மீறித் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது. தற்போது இந்த அரசுக்கு ஏமாற்றே மிஞ்சிப் போயுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பலவீனமான, வினைத்திறனற்ற, பொய் சொல்லும், ஏமாற்றும் தற்போதைய அரசு நாட்டு மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவித்து வருகின்றது. நேற்று திடீரென எரிபொருள் விலை அதிகரிப்பைச் செய்தது.

எரிபொருள் விலையை அதிகரித்த தற்போதைய அரசு, கடந்த தேர்தல் காலங்களில் ஏலவே காணப்படும் எரிபொருள் விலைச் சூத்திரத்தை மாற்றுவோம் எனக் கூறியது. போதாக்குறைக்கு துறைமுகத்தில் இறக்கப்படும் எரிபொருளை அதே விலையில் நுகர்வோருக்கு பெற்றுத் தருவோம் என உரக்கத் தெரிவித்தது.

துறைமுகத்தில் ஒரு விலைக்கு இறக்கப்படுகின்றது. பின்னர் பொது மக்களுக்கு மற்றொரு விலையில் விற்கப்படுகின்றது. ஊழல், மோசடி, திருட்டு மற்றும் இலஞ்சம் போன்றனவையே இதற்குக் காரணம். இவை அனைத்தையும் நிறுத்துவோம், எரிபொருள் மீதான வரிகளை நீக்குவோம், துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையில் எரிபொருளை மக்களுக்கு பெற்றுத் தருவோம் எனத் தற்போதைய ஆளும் தரப்பினர் வாக்குறுதியளித்திருந்தனர். ஆனால், தெளிவான அதிகாரத்தோடு ஆட்சிக்கு வந்த தற்போதைய ஆளும் தரப்பினரால் இன்றளவில் இதில் எதுவும் நடக்கவில்லை.

அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் கொமிஸ் எடுத்தல் நிறுத்தப்பட்டுள்ளனவா? எரிபொருள் மீதான வரிச்சுமைகள் நீக்கப்பட்டுள்ளனவா? என்பன குறித்து நாம் இந்த அரசிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையில் நுகர்வோருக்கு தற்போது எரிபொருள் வழங்கப்படுகின்றனவா? என்பது குறித்தும் நாம் இந்த அரசிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

ஐ.எம்.எப்வின் 4 ஆவது தவணையைப் பெறுவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவே இந்த அரசு இவ்வாறு செயற்பட்டு வருகின்றது.

எரிபொருள் விலைச் சூத்திரத்தை மாற்றி அதை மேலும் மக்களுக்கு சாதகமான ஒன்றாக மாற்றியமைப்போம் என்று பிரஸ்தாபித்தவர்கள் இன்றும் கூட முந்தைய அரசின் எரிபொருள் விலைச் சூத்திரத்தையே பின்பற்றுகின்றார்கள். எரிபொருள் விலையேற்றம் செய்யப்பட்டதன் அடிப்படையை நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்குத் தற்போது தட்டுப்பாடு நிலவுகின்றன. உயிர்களைக் காக்கத் தேவையான உபகரணங்கள் போதுமானதாக இல்லை என்று இதற்கு முன்னர் பல தடவை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியது. சில உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காணப்படும் எம். ஆர். ஐ. ஸ்கேனிங் இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டவர்கள் இந்தப் பரிசோதனை நடவடிக்கையை வெளியில் செய்ய வேண்டி வந்திருக்கின்றது.

மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றமை குறித்து எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமான பதில்கள் தெரிவிக்கப்பட்டு, ஆளும் தரப்பினர் எம் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பொய் சொல்லும், ஏமாற்றும் இந்த அரசின் இலவச சுகாதாரக் கொள்கை இவ்வாறே அமைந்து காணப்படுகின்றது.

நாட்டில் கொலைச் சம்பவங்களும் அவ்வாறு காணப்படுகின்றன. கொலைக் கலாச்சாரம் தொடர்ந்து வருகின்றது. அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், குண்டர்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களால் துப்பாக்கிச் சூடுகளும், கொலைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான எந்த வேலைத்திட்டமும் இந்த அரசிடம் இல்லையா?” என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் பலி!

by selvan
May 31, 2026
0

கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த...

தற்போதைய அரசு தமக்கு நெருக்கமான ஒரு சில குழுக்களுக்குச் சாதகமாகவே செயற்படுகிறது!

தற்போதைய அரசு தமக்கு நெருக்கமான ஒரு சில குழுக்களுக்குச் சாதகமாகவே செயற்படுகிறது!

by selvan
May 31, 2026
0

தற்போதைய அரசு தமக்கு அரசியல் ரீதியாக நெருக்கமான ஒரு சில குறிப்பிட்ட வணிகக் குழுக்களுக்குச் சாதகமாகவே தொடர்ந்து அநாவசிய முடிவுகளை எடுத்து வருகின்றது" என ஸ்ரீலங்கா பொதுஜன...

பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாது!

பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாது!

by selvan
May 31, 2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை

சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை

by selvan
May 31, 2026
0

திடீர் மின் தடை ஏற்படுவதைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இன்றைய தினமும் (31) முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி...

முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு தீர்மானம்!

முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு தீர்மானம்!

by selvan
May 31, 2026
0

எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, கட்டண...

பருத்தித்துறை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!

பருத்தித்துறை கடலில் காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளது!

by selvan
May 31, 2026
0

பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில்...

கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம்!

கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம்!

by selvan
May 31, 2026
0

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இந்தத் துயரச்...

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.

by selvan
May 31, 2026
0

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன. இருப்பினும், சினோபெக் நிறுவனம் சுப்பர்...

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

by selvan
May 31, 2026
0

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407...

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

by selvan
May 30, 2026
0

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி