வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் ஆடுகின்றது.
இதன்படி ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் சுற்றில் 180 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ட்ராவில் ஹெட் 59 ஓட்டங்களும், கவாஜா 47 ஓட்டங்களும் அடித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும், ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் எடுத்துள்ளது.










