• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வட மாகாண ஆளுநருக்கும் ஐ.நா ஆணையாளருக்கும் இடையிலான கலந்துரையாடல்..!

admin by admin
June 25, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
வட மாகாண ஆளுநருக்கும் ஐ.நா ஆணையாளருக்கும் இடையிலான கலந்துரையாடல்..!
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (25.06.2025) மாலை சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, “மீள்குடியமர்வு – காணி விடுவிப்புத் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை ஆணையாளர் கேட்டார். மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு அமைவாக படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படுகின்றன. இன்னமும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன என்று சுட்டிக் காட்டினோம்.

மேலும், வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம் என்பன இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல் காணிகளை சுவீகரித்துள்ளன. இதனால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் விவசாயக் காணிகள் என்பன இழக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் மாவட்ட ரீதியிலான குழுக்களை அமைத்து இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன்.

காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலும் ஆணையாளரும், ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதியும் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டனர். அந்தப் பொறிமுறை சரியானது என்றும், ஆனால் மக்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் மாவட்டச் செயலர்கள் இதன்போது ஆணையாளருக்கு சுட்டிக் காட்டினர்.

மேலும், ஆணையாளர் இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது, வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அந்த நடவடிக்கைகள் குறைந்துள்ளன என்றும் இன்னமும் சில பிரச்சினைகள் அதில் உள்ளன எனவும் ஆணையாளருக்கு சுட்டிக் காட்டினேன்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் ஆணையாளர் கரிசனையை வெளிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டேன். அத்துடன் கடந்த காலங்களிலிருந்த அரசாங்கங்கள் வெளிப்படுத்திய வேறுபாடுகள் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்பதையும், அது முற்போக்கானது என்பதையும் ஆணையாளருக்கு தெளிவு படுத்தினேன்.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதற்குரிய புனர்வாழ்வு நிலையம் என்பன தொடர்பிலும் ஆணையாளர் கேள்வி எழுப்பினார். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் இன்னமும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவில்லை என்பதையும், விரைவில் அதை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்கின்ற விடயத்தையும் ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன். அந்தப் புனர்வாழ்வு நிலையங்கள் யாரால் இயக்கப்படும் என்கின்ற விடயங்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்து கொண்டார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகள் தொடர்பாகவும் ஆணையாளர் தனது கவனத்தைச் செலுத்தியிருந்தார். இந்தியாவிலிருந்து திரும்பி வரும் மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்தால் மாத்திரமே அவர்களைத் தொடர்ச்சியாக இங்கே அழைக்க முடியும் என்ற விடயத்தையும் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினேன். மேலும், வடக்கில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும் என்னாலும், மாவட்டச் செயலர்களாலும் ஆணையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது” என ஆளுநர் தெரிவித்தார்.

Related Posts

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு!

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு!

by selvan
June 13, 2026
0

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.இன்றைய நிகழ்வின்போது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து...

இ.போ.ச. சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி பணி இடை நீக்கம்!

இ.போ.ச. சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி பணி இடை நீக்கம்!

by selvan
June 13, 2026
0

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச.) சாரதியுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட தனியார் பேருந்துச் சாரதி ஒருவருக்கு இரண்டு நாள்கள் பணி இடைநிறுத்தம் செய்து வடக்கு...

சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனை செய்த நபருக்கு ஒத்திவைத்த சிறைத்தண்டனை!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 6 மாத கால ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் அபராதமும்...

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் பகுதியில், சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தப் பகுதியில் நேற்று...

நெடுந்தீவுக் கடலில் மூழ்கிய மீனவர்! – தேடுதல் தீவிரம்

நெடுந்தீவுக் கடலில் மூழ்கிய மீனவர்! – தேடுதல் தீவிரம்

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் - நெடுந்தீவிலிருந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவர் ஒருவர் கடல் கொந்தளிப்புக் காரணமாகக் காணாமற்போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றது இந்த பயங்கரவாத சட்டமே!

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றது இந்த பயங்கரவாத சட்டமே!

by selvan
June 13, 2026
0

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றதும் இந்த பயங்கரவாத சட்டமே என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிதுள்ளர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்...

குழந்தையை கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து விபத்தில் உயிரிழப்பு!

by selvan
June 13, 2026
0

குருநாகல் - புத்தளம் வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 40 வயதுடைய தந்தை ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் அவுலேகம பகுதியைச்...

பருத்தித்துறையில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வல்லிபுரக்குறிச்சி பகுதியைச்...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர்கள் சங்கமம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர்கள் சங்கமம்

by selvan
June 13, 2026
0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கலாமன்றங்களின் கலைஞர்களுக்கான விசேட ஒன்று கூடல் நிகழ்வு, இன்றைய தினம் சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக...

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் சிக்கியது பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் வாகனம்!

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் சிக்கியது பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் வாகனம்!

by selvan
June 13, 2026
0

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிலிப்பையா அலெஸ்ரன் அவர்களுக்கு சொந்தமான வாகனம் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் கடற்படையினரிடம் சிக்கியுள்ளது. அதில் கொண்டு செல்லப்பட்ட சுருக்கு வலைகளும் வாகனமும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி