“மூதூரில் நான்கு தசாப்களின் பின் தலைமைப் பதவியை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. அதுபோன்று திருகோணமலை மாநகர சபையையும் கைப்பற்றியுள்ளது” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலை மாநகர சபை முதல்வர் தெரிவு இன்று (23) இடம் பெற்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இலங்கையில் உள்ள மாநகரங்களில் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய வகையில் திருகோணமலை மாநகரத்தை எடுத்துக் காட்டுவோம்” என்றார்.
திருகோணமலை மாநகர சபையின் மாநகர முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவாகிய நிலையில் அவர் ஊடகங்களுக்கு “திருகோணமலை மாநகர சபையின் வளர்ச்சிக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜாதி, மத ,மொழி பேதமின்றி ஒன்றினைந்து அனைத்து உறுப்பினர்களின் உதவியை கோரி நிற்கின்றேன். எதிர்காலத்தில் திறம்பட ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கிறேன்” என்றார்.