• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி.!

Mathavi by Mathavi
June 10, 2025
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
மன்னாரில்  முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி.!
Share on FacebookShare on Twitter

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம்பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயற்திட்டமாக காணப்பட்டாலும், குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் மன்னார் தீவு மற்றும் பெரு நிலப்பரப்பிலும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும், குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனவே மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து நாளைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடையும்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்படும். எனவே குறித்த பேரணியில் மன்னார் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது இருப்பை தக்க வைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 22, 2026
0

புத்தளம் மாவட்டம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராம சேவகர் பிரிவில் உள்ள சின்னக்கொலனி கடற்கரைப் பகுதியில் இன்று (22) காலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 03 கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள்...

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

ஜனநாயகத்தையும் கல்வி சுதந்திரத்தையும் காக்கவே பேராதனை மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.!

by Mathavi
June 22, 2026
0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அன்று தங்களது உயிர்களைத் தியாகம் செய்தமை, இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும், பல்கலைக்கழகங்களுக்குள் நிலவ வேண்டிய கல்விசார் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும்...

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

யானை தாக்கி பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

இரத்தினபுரி - இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவிற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று தாக்கியதில், அதன் பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர். நேற்று...

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஊழல்வாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.!

by Mathavi
June 22, 2026
0

1988 - 1989 காலப் பகுதியில் இடம்பெற்ற கடுமையான அடக்குமுறைகளுக்குப் பின்னர், சோசலிச மாணவர் சங்கத்தின் முதலாவது தேசிய அமைப்பாளராகப் பொறுப்பேற்றுப் புதிய அரசியல் பயணத்தை வழிநடத்திய...

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழு முழு ஒத்துழைப்பு வழங்கும்.!

by Mathavi
June 22, 2026
0

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்று அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன்,...

மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.!

மக்களை அணிதிரட்டி இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.!

by Mathavi
June 22, 2026
0

நாடு பூராகவும் அரசுக்கு எதிரான கூட்டங்களை நடத்தி, மக்களை அணிதிரட்டி தற்போதைய அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று முன்னாள் அமைச்சரும் எதிரணியின் நாடாளுமன்ற...

போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

தம்புத்தேகம - யாய 05 பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்துள்ளவர் யாய 05, இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர்...

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

போதைப்பொருள் கடத்தல்; இருவர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர், பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி