குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இன்றைய (4) நாடாளுமன்ற அமர்வின் போது குச்சவெளியில் மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே பிரதி அமைச்சர் இது தொடர்பாக ஆராய்ந்து விசாரணைகளை ஆரம்பிப்பதாக உறுதி அளித்தார்.
ADVERTISEMENT