• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

சிசுவுடன் உயிரிழந்த தாய் – மருத்துவ தவறின் அர்த்தமில்லா இறப்பு!

admin by admin
May 24, 2025
in இந்திய செய்திகள்
0
சிசுவுடன் உயிரிழந்த தாய் – மருத்துவ தவறின்  அர்த்தமில்லா இறப்பு!
Share on FacebookShare on Twitter

ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23).

கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம் குன்றி இருந்தார். இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியான சவாய் மான் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அங்கு கர்ப்பிணி சைனாவுக்கு ரத்தப்பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரத்தப்பரிசோதனை முடிவில் அவரது ரத்த வகை ‘ஏ பாசிட்டிவ்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

வைத்தியரின் பரிந்துரைப்படி, ரத்த வங்கியில் இருந்து ‘ஏ பாசிட்டிவ்’ வகை ரத்தம் பெறப்பட்டு, சைனாவுக்கு ஏற்றப்பட்டது. பின்னர் திடீரென்று சைனாவுக்கு கடுமையான காய்ச்சல், குளிர், ரத்தக்கசிவு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, மீண்டும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவரது ரத்தவகை ‘பி பாசிட்டிவ்’ என்று வந்தது.

இதையடுத்து டாக்டர்கள் நடத்திய மறு பரிசோதனையில், சைனாவின் ரத்தவகை ‘பி பாசிட்டிவ்’ என்பதும், ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனிடையே உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சுவாதி ஸ்ரீவத்சவா கூறுகையில், “நான் அவரை பரிசோதித்து விட்டு, அவருக்கு சில சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்தேன். பின்னர் விடுப்பில் இருந்ததால் என்ன நடந்தது என்பது தெரியாது.

இருப்பினும் மற்றவர்களிடம் விசாரித்தபோது, அவருக்கு ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டது தெரியவந்தது. ஏற்கனவே கடுமையான காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாலும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துவிட்டதாலும் அவரது உடல் மிகவும் சிக்கலான நிலைக்கு சென்றுவிட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி உயிரிழந்துவிட்டார், என்று கூறினார்.

அதேநேரம் இதுபற்றி சைனாவின் உறவினர் பிரேம் பிரகாஷ் கூறுகையில், ரத்தம் மாற்றி ஏற்றப்பட்டது குறித்து டாக்டர்கள் எங்களிடம் எதுவும் கூறவில்லை. ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் நடந்ததுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

Related Posts

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு அனுமதி

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு அனுமதி

by selvan
June 10, 2026
0

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரும் கடல்வாழ் உயிரினங்கள், முட்டை மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது....

ஜெய்ப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் இருந்த மத வழபாட்டுத் தலங்கள் இடித்தழிப்பு!

ஜெய்ப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் இருந்த மத வழபாட்டுத் தலங்கள் இடித்தழிப்பு!

by selvan
June 10, 2026
0

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கோவில்கள், மசூதி உள்ளிட்ட சில மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு 3,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம்,...

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!

தமிழக முதல்வர் விஜய் மீண்டும் டெல்லிக்கு பயணம்!

by selvan
June 10, 2026
0

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (10) புது டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். மே மாதம் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்!

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்!

by selvan
June 10, 2026
0

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று...

ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய அரசு தனது குடிமக்களுக்கு உத்தரவு!

ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய அரசு தனது குடிமக்களுக்கு உத்தரவு!

by selvan
June 9, 2026
0

ஈரான் – இஸ்ரேல் இடையே மீண்டும் போர் வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் ஈரான் செல்ல வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஈரானின் எச்சரிக்கையை...

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை!

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை!

by selvan
June 5, 2026
0

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள்...

பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!

பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!

by selvan
June 5, 2026
0

பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியுள்ளார்.  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை இராஜினாமா செய்ததை பாஜகவின் தேசியத் தலைவர் நிதின்...

டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

by selvan
June 5, 2026
0

டெல்லியின் மால்வியா (Malviya) நகர் ஹோட்டலில் நேற்றைய (03) தினம் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்த விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என...

தமிழ்நாட்டிற்கான நிதி  குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாட்டிற்கான நிதி குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

by selvan
June 4, 2026
0

125 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி 4.1% ஆக குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையிலான முடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாது...

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

by selvan
June 4, 2026
0

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு, தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கர்நாடக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி