“கொழும்பு மாநகர சபையில் நாம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டோம். இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பை மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளது” என அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையில் எதிரணியே ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைப் பலத்தை உறுதிப்படுத்தி விட்டோம். அதிகாரபூர்வமற்ற வகையில் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டிய வேலை மட்டும் தான் உள்ளது. எமது மேயரும் பதவியேற்றத் தயாராகவுள்ளார்” என்றார்.
ADVERTISEMENT