வவுனியா மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய வவுனியா நெற்வோல் பிறிமியர் லீக் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியானது இன்று வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் இறுதிப் போட்டியில் பிவோட் பார்ட்டி அணி எதிர் பாஸ் ப்ரோடக்டேட் அணி மோதின. இதில் 42:37 என்ற புள்ளி அடிப்படையில் பாஸ் ப்ரோடேக்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக இலங்கையின் தேசிய வலைப்பந்தாட்ட வீரர் திலினி டினெசிக்க கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.
குறித்த சுற்றுப்போட்டியில் பவர்பாசர்ஸ், டினாமிக்7, வுளொக்கிங் றொக்கெற்ஸ், பிவோட் பாட்டி, பாஸ்ட் புரெக்டர்ஸ் ஆகிய அணிகள் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



