அமெரிக்கா – சீனா இடையே பரஸ்பர வரிவிதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளையடுத்து கடந்த 2 நாட்கள் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் உள்ளிட்ட அமெரிக்கக் குழுவிற்கும், துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் தலைமையிலான சீனக் குழுவிற்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், சீனாவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த ஒப்பந்தம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்று (12) பகிரப்படும் என்றும், இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்து ஜனாதிபதி ட்ரம்பிடம் முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.