நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் அம்பாறை மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.