இன்று (7) பிற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மே 20 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று காலை அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, அவர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
அத்துடன், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.