வள்ளிபுனம் பகுதியிலுள்ள வாக்குச் சாவடிக்கு அண்மித்த பகுதியில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர் சின்னம் அடங்கிய துண்டுபிரசுரத்தினை மக்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளரான 38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT