• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இக் குற்றவாளி தண்டிக்கப்படுவாரா?

Mathavi by Mathavi
May 3, 2025
in இலங்கை செய்திகள்.
0
இக் குற்றவாளி தண்டிக்கப்படுவாரா?
Share on FacebookShare on Twitter

ஊடகவியலாளர் நிமலராஐன் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை அவரது வீட்டில் ஆயுததாரர்கள், வீட்டின் யன்னல் ஊடாக அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அப்போது அவர் எழுதிக்கொண்ட கட்டுரை மீது வீழ்ந்து உயிர் துறந்தார்.

இன்று ஊடகவியலாளர் நிமலராஐன் யாழில் படு கொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடக்கும் நிலையிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது பெரும் கவலைக்குரிய விடயம் ஒன்று.

நீதி எப்படி கிடைக்கும்?

ஆம், ஊடகவியலாளர் நிமலராஐன் படு கொலையோடு நேரடி தொடர்பில் இருந்த அந்தக் குற்றவாளி இன்னும் எம் மண்ணில் அதாவது யாழ் மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். கனடா நாட்டு இரட்டை பிரஜா உரிமையை கொண்ட இவர் ஈபிடிபி யில் இருந்து இப்போது வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் புதிதாக ஒரு சுயோட்டை குழு ஒன்றை தனது தலைமையில் உருவாக்கி இம்முறை நடைபெற உள்ள பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுகின்றார்.

விடுதலைப் புலிகள் காலத்தில் அதுவும் குறிப்பாக 2000 – 2005 ம் ஆண்டு காலப்பகுதியில் யாழில் பல படு கொலைகள், கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற விடயங்கள் கடுமையாக நடைபெற்ற காலம். அந்த காலப்பகுதியில் ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுதலைப் புலிகளின் கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து கவச வாகனத்திலும், கொழும்பிலும் தான் இருந்து வந்தார். அப்படியான ஒரு சூழலில் ஈபிடிபி யின் யாழ் மாவட்ட அலுவலகத்தை தன்னகப்படுத்தி வைத்துக்கொண்டவர் தான் இந்த Vk ஜெகன் ( வேலும்மயிலும் குகேந்திரன் ) என்பவர்.

இவர் நேரடியாக இராணுவத்தின் ஒரு Agent ஆக அந்த காலப்பகுதியில் செயற்பட்டு வந்தார். இவருடைய நேரடியான தொடர்பில் பல குற்றச் செயல்கள் யாழ் மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. அதில் மிக குறிப்பாக ஊடகவியலாளர் நிமலராஐன் படு கொலை, மற்றும் உதயன் பத்திரிகை நிறுவன ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டது.

உதயன் பத்திரிக்கை ஊழியர் படு கொலைக்கு இவருக்கு தகவல் வழங்கியது இவருடைய உறவினர் ஒருவர். அதே உதயன் பத்திரிக்கையில் பணிபுரிந்து வந்தவர். இந்த சம்பவத்தின் பின் தகவல் வழங்கியவர் இந்தியா சென்று தற்போது நாட்டுக்கு திரும்பி வந்துவிட்டார்.

ஊடகவியலாளர் நிமலராஜன் படு கொலை செய்யப்பட்டது யாரால்? என்பது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் M.A. சுமந்திரன் ஒரு தடவை தீபம் பத்திரிக்கைக்கு தனது நேர்காணல் மூலம் மிகத் தெளிவாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு தான் ஈபிடிபி யோடு இருந்தால் தனக்கு ஆபத்து என நினைத்துக்கொண்ட vk ஜெகன் ஈபிடிபி யில் இருந்து தன்னை விலத்திக்கொண்டு கூட்டமைப்பில் இணைவதற்கு முயற்சிகள் செய்தார். ஆனால் சுமந்திரன் ஆயுத குழுக்களோடும், படு கொலைகளோடும் தொடர்பில் இருந்தவர்களை கூட்டமைப்பில் இணைக்க விருப்பம் காட்டாத போது Vk ஜெகன் விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சியில் இணைய முயற்சிகள் செய்து அதுவும் கைகூடவில்லை இப்படி எதுவும் கைகூடாத போது தன்னை காப்பாற்றிக்கொள்ள தானாக சுயேட்சைக் குழு ஒன்றை உருவாக்கி தனக்கான அரசியல் பாதுகாப்பை தேடி வருகின்றார்.

இறுதியாக நடந்துமுடிந்த தேர்தலில் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் Npp க்கு ஆதரவு கொடுத்து ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பும் போது வடக்கு மக்களும் அதை தெரிவு செய்து Npp அரசுக்கு ஆதரவு அளித்து வாக்குகளை பதிவு செய்தார்கள். இதன்மூலமாக யாழ் மாவட்டத்தில் இருந்து 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் Npp சார்பாக நாடாளுமன்றம் தெரிவாகினார்கள். இதில் ஸ்ரீபவானந்தராஜா அவர்களின் வெற்றியை VK ஜெகன் தன்னால் தான் அவர் வெற்றியடைந்தார் என்ற ஒரு விம்பத்தை உருவாக்கி Npp அரசுக்கு தான் ஆதரவான நபராக தன்னை முன்னிறுத்தி கொண்டார். இதற்கு எல்லாம் முக்கியமான காரணம் Npp அரசு பழைய குற்றச்செயல்களை மீள விசாரிக்கும் போது தன்னை காப்பாற்றிகொள்ள vk ஜெகன் போட்ட திட்டங்கள்.

இவ்வாறு பல முறைகளில் தன்னை பாதுகாத்து வருகின்றார். இவர் ஈபிடிபி யில் இருந்த காலப்பகுதியில் இவருக்கு கையூட்டல் கொடுத்து அரச வேலைகளை பெற்றவர்கள் வேறு பல தேவைகளை பூர்த்தி செய்தவர்கள் இன்று யாழில் பல அரச திணைக்களங்களில் உயர்பதவில் இருந்து வருகின்றார்கள். அவர்களை இன்று சரியாக பயன்படுத்தி தான் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தாது கைகூலிகளை வைத்து இன்றும் பல மோசடிகளை செய்துவருகின்றார். நிலங்களை ஆட்சி உரிமம் பிடிப்பது, அடிதடி குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் ஊடாக பல அச்சுறுத்தல்களை செய்வது, சக போட்டியிடும் வேட்பாளர்களை மிரட்டுவது போன்ற விடயங்களை தனது அடியாட்களை வைத்து செய்து வருகின்றார். அன்று ஆயுத குழுவாக இயங்கி வந்தவர் அதே பாணியில் இன்றும் சில இளைஞர்களை தூண்டிவிட்டு அவர்களை வைத்து தன்னை பாதுகாத்தும் தனக்கான தேவைகளை இன்றும் செய்து வருகின்றார். இதற்கு பல அரச அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றார்கள்.

ஆனால், எந்த இடத்திலும் தான் தான் செய்வது என்று அவர் காட்டிக்கொள்ளுவதில்லை. யாழில் நடந்த பல கடத்தல், படு கொலைகள், கப்பல் பெறுதல் இவரால் இடம்பெற்றது என்பதை உறுதிசெய்த பின் தமிழீழ விடுதலை புலிகள் இவரை கொலை செய்ய திட்டமிட்டு ஆள் அனுப்பி இருந்தது. இவருடைய காலகஷ்டம் அப்படி அனுப்பப்பட்டவர் இவருடைய உறவினர் என்பதால் இவரை கொலை செய்யாமல் தப்பிச்செல்ல வைத்தார். அப்படி தப்பி செல்ல வைத்தவரும் இன்னும் உயிருடன் இந்தியாவில் போரூரில் இருக்கின்றார்.

கனடா நாட்டு இரட்டை பிரஜையாக இருக்கும் இவர் தேர்தல் காலங்களில் தனது குற்ற செயல்களை யாராவது ஊடகங்களில் தெரிவித்துவிட்டால் தனக்கு ஆபத்து என்று அந்த அந்த நேரங்களில் கனடா சென்றுவிடுவார். தற்போதும் தன் தலைமையில் சுயேட்சை குழுவை களம் இறக்கிவிட்டு கனடாவில் தான் இருக்கின்றார்.

எனவே இதுபோன்ற படு கொலைகளை செய்தவர்கள் வெளிநாட்டுக்கு ஓடி ஒளிந்திருந்துவிட்டு மீண்டும் வந்து தங்கள் கரங்களை சுத்தம் செய்ய எடுக்கு நடவடிக்கைகளுக்கு எம் நாட்டின் நீதி என்ன? இவர்களால் இறந்தவர்களின் ஆத்மா இவர்களை சும்மா விடுமா?

ஊடகவியலாளர் நிமலராஐன் படு கொலைக்கு நீதி கிடைக்க போராடுவோம். இதுபோன்ற குற்ற செயல்களை செய்த இனத்துரோகிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கிடைக்க போராடுவோம், சட்டத்தின் முன் நின்று பதில் சொல்ல வேண்டியவர்கள் தங்கள் கரங்களை சுத்தப்படுத்த இப்ப போடும் வேஷங்களை கலைக்க வேண்டும்.

Related Posts

நீர்நிலைகளில் கவனமாக இருக்கவும்!

நீர்நிலைகளில் கவனமாக இருக்கவும்!

by selvan
June 28, 2026
0

பொசன் பண்டிகை காலப்பகுதியில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...

அதிவேக மற்றும் கவனக்குறைவான சாரதிக்கு நேரடியாக சட்ட நடவடிக்கை!

by selvan
June 28, 2026
0

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக உடனடி அபராதங்களை விதிப்பதற்குப் பதிலாக, நேரடியாகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு...

2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு!

2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு!

by selvan
June 28, 2026
0

2027ஆம் கல்வி ஆண்டு முதல் 6ஆம் தர மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின்...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எபிடகடுவ தெரிவு!

by selvan
June 27, 2026
0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மருத்துவ நிபுணர் சந்திக எபிடகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27)...

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே? – அறிக்கை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்!

by selvan
June 27, 2026
0

மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் அரச தவணைப் பணம் குறித்து அரசு நாடாளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்...

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

by selvan
June 27, 2026
0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

by selvan
June 27, 2026
0

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று(27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

சுரேஷ் சலேவுக்கு திடீர் மாரடைப்பு!

by selvan
June 27, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, திடீரென ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப்...

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

by selvan
June 27, 2026
0

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிகள் மோதும் 9வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் தர்மபுரம் மத்திய...

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

by selvan
June 27, 2026
0

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு   ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி