• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 1, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வளச் சுரண்டல்கள், அடக்கு முறைக்கு எதிராக ஊர்வலம்.!

Mathavi by Mathavi
April 29, 2025
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0 0
0
வளச் சுரண்டல்கள், அடக்கு முறைக்கு எதிராக ஊர்வலம்.!
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை, வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் மே தின நிகழ்வுகள் மன்னாரில் முன்னெடுக்கப்பட உள்ளதாக மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் வட மாகாண பொதுச் செயலாளர் நடராஜா தேவகிருஷ்னன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (29) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

அடக்கு முறைக்கும் வளச் சுரண்டல்களுக்கும் எதிராக மே தினத்தை நினைவு கூறி வந்துள்ளோம். இந்த நிலையில் இலங்கை ரீதியாக உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அனைவரையும் ஒன்றினைத்து மே தின நிகழ்வை முதல் முதலாக சுரண்டல் மற்றும் அடக்கு முறைக்கு எதிராக மன்னார் நகரில் மே தின நிகழ்வை முன்னெடுக்க உள்ளோம். முதல் முதலாக மன்னாரில் நாங்கள் மே தின நிகழ்வை முன்னெடுக்கிறோம்.

மன்னாரில் வளச்சுரண்டல்கள் இடம் பெற்று வருவதோடு,மீனவர்கள் பாதிப்பு மற்றும் காணிகள் அபகரிப்புக்கள் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. இலங்கை இந்திய ஒப்பந்தம், அமெரிக்கா, இலங்கை ஒப்பந்தம் வருகிற போது காற்றாலை திட்டங்கள் முன்னெடுக்கின்ற போது மீனவர்கள் வாழ்வாதாரங்கள் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படுகின்றது.

திட்டமிட்ட இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறல்கள் காரணமாக எமது மீனவர்கள் பாரிய நெருக்கடியை சந்திக்கிறார்கள். மேலும் தொடர்ச்சியாக மன்னாரில் உள்ள வளங்களை சுரண்டுகின்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது. இதனை கருத்திற்கொண்டு இதற்கு எதிராக குரல் கொடுக்கும் வரையில் இலங்கையில் உள்ள விவசாயிகள், மலையக மக்கள், அனைவரும் ஒன்றினைந்து மன்னார் நகரில் ஒன்று கூடி குறித்த திட்டங்களுக்கு எதிராகவும், மன்னார் மக்களுக்கு ஆதரவாகவும் மே தினப் பேரணி மற்றும் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

எதிர்வரும் 1 ஆம் திகதி மதியம் 3 மணிக்கு மன்னார் பஜார் பகுதியில் மே தினக் கூட்டம் இடம்பெற உள்ளது.

மே தின ஊர்வலம் அன்றைய தினம் மாலை 2 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடையும். பின்னர் அங்கு மே தினக் கூட்டம் இடம்பெறும்.

மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு மாயையான தோற்றத்தை உருவாக்கி உள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான ஒரு தீர்வை முன்வைக்க ஜனாதிபதியினால் முடியும். அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பதனையும் அவரால் கூற முடியும்.

மேலும் காணி அபகரிப்புக்களும் பல்வேறு முறைகளில் இடம்பெற்று வருகின்றது.

நாட்டின் அனைத்து மாகாணங்களில் இருந்தும் மன்னாரில் இடம்பெறவுள்ள மே தின ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் வருகை தர உள்ளனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் வகையில் மே தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

Thinakaran
412 724.1K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! 1 day ago
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 3 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 4 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      இளைஞர் கழகங்கள் ஊடாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

      இளைஞர் கழகங்கள் ஊடாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      இளைஞர் கழகங்களை வலுப்படுத்தி இளைஞர் கழகங்கள் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலக இளைஞர் கழக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இளைஞர் விவகாரம் மற்றும்...

      வட மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு.!

      வட மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, ஆறு...

      வடக்கு, கிழக்கில் 35 இற்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்ற தமிழரசு எதிர்பார்ப்பு.!

      வடக்கு, கிழக்கில் 35 இற்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்ற தமிழரசு எதிர்பார்ப்பு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் 35 இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்பார்த்துள்ளது என்று அந்தக் கட்சியின் பதில் பொதுச்...

      செங்கலடி ஏறாவூர்ப்பற்று தவிசாளர் பதவி யாருக்கு?

      செங்கலடி ஏறாவூர்ப்பற்று தவிசாளர் பதவி யாருக்கு?

      by Mathavi
      June 1, 2025
      0

      மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசுக் கட்சிக்குள் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. 32 உறுப்பினர்களைக் கொண்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச...

      ‘செல்பி’ மோகத்தால் இரு மாணவிகள் உயிரிழப்பு.!

      ‘செல்பி’ மோகத்தால் இரு மாணவிகள் உயிரிழப்பு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      முல்லைத்தீவு, குமுழமுனை, கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயக் கேணியில் இன்று செல்பி எடுக்கச் சென்ற பாடசாலை மாணவிகள் இருவர், கேணிக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். கேணிக்குள் தவறி வீழ்ந்த...

      ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல்.!

      ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      ஊடகவியலாளர்களின் படு கொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த படு கொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின்...

      சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு.!

      சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு.!

      by Mathavi
      June 1, 2025
      0

      சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. இன்று (01.06.2025) காலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உள்துறைமுக வீதியில் உள்ள கடற்கரைப்...

      தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும்.!

      தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      உள்ளூராட்சி சபை ஆட்சியமைப்பில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா...

      தமிழரசின் பிரதேச சபை உறுப்பினர்கள் கிளிநொச்சியில் சத்தியப்பிரமாணம்.!

      தமிழரசின் பிரதேச சபை உறுப்பினர்கள் கிளிநொச்சியில் சத்தியப்பிரமாணம்.!

      by Mathavi
      June 1, 2025
      0

      இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டு கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சம்பிரதாயபூர்வ சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை, தமிழரசுக்...

      Load More
      Next Post
      சீன உணவகத்தில் பயங்கர தீவிபத்து – 22 பேர் பலி

      சீன உணவகத்தில் பயங்கர தீவிபத்து – 22 பேர் பலி

      அநுர அரசாங்கமும் அரசியல் தலையீடு – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு.!

      அநுர அரசாங்கமும் அரசியல் தலையீடு - இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு.!

      ‘போதைப்பொருள் வேண்டாம் நமது இளையோரைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு.!

      'போதைப்பொருள் வேண்டாம் நமது இளையோரைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி