சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இன்று (01.06.2025) காலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உள்துறைமுக வீதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு, கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பங்கேற்பாளர்களால் 70 பைகளாக (ஒவ்வொன்றும் சுமார் 30 கிலோ) மொத்தம் 2,100 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
இந்நிகழ்வு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.








