இளைஞர் கழகங்களை வலுப்படுத்தி இளைஞர் கழகங்கள் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலக இளைஞர் கழக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எரங்க குணசேகர கலந்து கொண்டிருந்தார்.
இக் கலந்துரையாடல் பரந்தன் கிராம அலுவலக வளாகத்திலுள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
கண்டாவளை பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் அந்தோணிமுத்து ஜெயாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர்
எரங்க குணசேகர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள அனைத்து யூத் கிளப்களுக்கும் விஜயம் செய்ய உள்ளதாகவும், அவர்களின் தேவைகள் அறிந்து தேவைக்கு ஏற்ற வகையில் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று வேறுபாடு இல்லாமல் அனைவரும் அனைத்து மொழியிலும் சரளமாக உரையாடக் கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக பாரியளவில் நிதி வடக்கு, கிழக்குக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும் அந்த நிதியினை வடக்கு கிழக்கில் உள்ள யூத் கிளப்கள் ஊடாகவே வழங்க உள்ளதாகவும் கடந்த 30 வருட யுத்தத்தில் இந்தப் பகுதி ரத்தத்தால் கண்ணீராலும் தோய்ந்த பகுதிகளாக காணப்பட்டது. ஆனால் இனி வரும் காலங்கள் இப்படியான சம்பவங்களுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.





