உள்ளூராட்சி சபை ஆட்சியமைப்பில் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சுயலாப கட்சி அரசியலை விட்டு விட்டு சமூகம் சார்பாக செயற்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா சமூகம் ஒன்றுபட வேண்டிய தேவைகள் பற்றி காலங் கடந்து ஏற்று கொண்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் 30 ஆசனங்களை அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காக்கிரசும், 26 ஆசனங்களை மக்கள் காங்கிரசும், 20 ஆசனங்களை அதாவுல்லாவுடைம தேசிய காங்கிரசும் நேரடியாக முசாரப் பொத்துவிலில் 08 ஆசனங்களையும் அதே நேரத்தில் சுயேட்சை குழுக்கள் அந்த பிரதேசத்தில் 22 க்கு மேற்பட்ட ஆசனங்களையும் பெற்றிருக்கின்ற இந்த வேளையில் முஸ்லிம் சமூகம் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பல உரிமைகளை இழந்திருக்கின்ற நேரத்திலே எங்களுடைய கோரிக்கைகளை அல்லது அபிலாசைகளை இனவாதமாக, மதவாதமாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் எடுத்தியம்புவதற்கு சவாலாக நீங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறிய போது அதனை ஏற்றுக் கொண்டதாக நான் அறியவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடைய தலைவர் மாகாண சபை தேர்தலை மையப்படுத்தி அவர் தமிழ் கட்சிகளுடனான உடன்பாட்டுக்கு வந்தது போன்று எந்தவொரு முயற்சியையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடனோ, தேசிய மக்கள் காங்கிரசுடனோ, முசாரப்புடனோ ஒன்றுபட்ட தீர்மானத்துக்கு வரவில்லை என்பதை இன்றை வரைக்கும் முடிவுக்கு வரவில்லை. அதே போன்று வடகிழக்கில் பெருமாபான்மையை பெற்ற தமிழரசு கட்சியும் விக்னேஸ்வரனின் ஜனநாயக முன்ணனியும், கஜேந்திரகுமார் அவருடைய தமிழ் காங்கிரசும் நேற்று வரை அந்த பேச்சு வார்த்தைக்கு முடிவுக்கு வரவில்லை.
அவரவர்களுடைய ஆதிக்கம் பற்றி பேசுவார்களே தவிர ஒன்றுபட்ட ஒரு செயற்பாட்டின் மூலமாக தேசிய மக்கள் சக்தியினுடைய சவால்களுடைய முயற்சிக்கு முகங்கொடுப்பதற்கு எந்த முயற்சியையும் இவர்கள் பெற்று கொள்ளவில்லை. எதிர்காலத்தில் மாகாண சபைகள் நாடாளுமன்றம் வருகின்ற போது தனித்துவமாகவோ அல்லது தேசிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து கேட்க முடியும். ஆனால் நாளையில் இருந்து ஆரம்பமாகவுள்ள இந்த உள்ளூராட்சிமன்ற சபைகள் அமையப்போகின்ற நேரத்திலே கேவலம் ஒரு முடிவு காண முடியாத தமிழ் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் தீர்க்கமான முடிவினை இந்த வாரத்திற்குள் எடுத்து அவர்கள் சமூகத்துக்காக ஒன்றுபட வேண்டும்.
ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பாக இந்த முண்ணனி செயற்படுவதன் மூலம் உள்ளூராட்சி மன்ற அதிகாரம் என்பது 1987 ம் ஆண்டின் 15ம் தரத்தில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதே போன்று தான் வருகின்ற மாகாண சபை தேர்தலிலும் பழைய முறையிலா புதிய முறையிலா? என்ற விடயம் 159 ஆசனங்கள் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியுடைய கைகளில் இருக்கின்றது. பழைய முறைக்கு போவற்கு சாணக்கியன் போன்றவர்கள் ஒரு பிரேரனை கொண்டு வந்துள்ளார்கள். அதனை நிறைவேற்ற முடியும். இந்த விடயங்களில் தங்களது கட்சிகளுடைய சுயநல அரசியலை விட்டு விட்டு சமூகம் சார்ந்த தீர்வுகளையும் முடிவுகளையும் பெற்றால் அது சமூகத்துக்கும் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் பழிவாங்கல்களுக்கும் அல்லது மற்றைய விடயங்களோடு விட்டு ஒதுங்குவதற்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாங்களும் பங்காளிகளாக மாற முடியும். தமிழ், முஸ்லீம் சிறுபான்மை கட்சிகள் ஒன்றுபட்டு இந்த உள்ளூராட்சி சபைகளை அமைக்க வேண்டும் என்பது தான் ஒரு சரியான தீர்மானமாகும் என்றார்.