உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்ய ஜனாதிபதி புடின் முதல்முறையாக அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (20) ஈஸ்ரர் பண்டிகையை ஒட்டி 30 மணி நேர போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டது. நேற்று(21) இந்த போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் போர் நிறுத்தத்தை நீடிக்க உக்ரைன் அழைப்பு விடுத்தது.
குறைந்தபட்சம் பொதுமக்கள் வசிக்கும் இலக்குகளைத் தாக்கக்கூடாது என்ற தனது திட்டத்தை உக்ரைன் தொடர்கிறது. மேலும் மாஸ்கோவிடமிருந்து தெளிவான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி பேசியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறுகையில் ,
போர் நிறுத்தம் குறித்து எங்களுக்கு நேர்மறையான அணுகுமுறை உள்ளது. எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் நாங்கள் தயாராகவிருக்கிறோம், உக்ரைனும் அதற்கு விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த வாரம் லண்டனில் சந்திக்க உள்ளனமையும் குறிப்பிடத்தக்கது.