கவிஞர் இரா. மேரியனின் படைப்புகளில் ஒன்றான “மூன்றாவது கண் ” கவிதை நூலினை வாசிக்க வாசிக்க கவிதைகளில் இன்பம், புத்துணர்ச்சியின் ஈடுபாடு அதிகமாக தென்படுகிறது.
மரபணுவில் கவிதைத் தொடர்களை ஊற்றிப் பிறந்த கவிஞர் மேரியன் அவர்கள் புதுமைகளை இரசிக்கும் புதிய எண்ணம் கொண்டவர். இவரது கவிதைகள் சமூக அவலங்கள், சமூக மாற்றங்களை பேச எத்தனிக்கவில்லை மாறாக இயற்கை, ஒப்பனை, காதல், பாசம், உறவு, முயற்சி, வாழ்கை போன்ற இருக்கின்ற இயல்பினை அப்படியே இரசிக்க கூடியதாக இருக்கிறது.
ஒய்யாரி என்ற தலைப்பில்
“ஒய்யாரியே சிங்காரியே
சிக்கனமான சிற்றிடையாளே
சித்தமும் கலங்கி
நித்தமும் நினைக்கிறேனடி
ஓரக்கண் பார்வையிலே
ஒய்யாரமாக இழுக்கிறியே
விழியால் பல
மொழி பேசி
கட்டுக்குள் வைத்து
கலங்கடிக்கிறாயே என்னையும் “
செம்மொழி ஜனித்த
பொன்நாடு எம்தேசம் எனும் தலைப்பில்
“வந்தோரை வாழவைத்த
பெரு நகரமிது
வள்ளுவன் இளங்கோ
பாரதி கம்பன்
பல புலமைகள்
வந்துதித்த புதுமையிது
வரப்புயரவென்ற சொல்லை
வானுயரச்செய்த அதிசயம்
நியாத்தீயாய் எரிந்த
மதுரையும் வந்ததுவோ
கற்சிலையாய் வானுயர்ந்த
கோபுரமாய் தஞ்சையுமிங்கே
கரிகாலனும் கட்டிய
கல்லணையாய் நீருமங்கே “
தடாகத்தின் மீது நீந்திடும்
அன்னமே எனும் தலைப்பில்
“தடாகத்தின் மீது
நீந்திடும் அன்னமே
நீயோ எங்கள்
இலக்கியச் சொந்தமே
காதலுர்க்குக் கண்
கவர்ந்த தெய்வமே
தூதெனும் செயலுக்கு
வடிவம் தந்தாயே
இணைப்புப் பாலமதின்
முக்கிய அங்கமே
உறவுகளை இணைத்திட்ட
உயிரான தங்கமே “
கவிஞருடைய எல்லாக் கவிதைகளும் அழகினை எவ்வாறெல்லாம் இரசித்து ருசிக்கலாம் என்று புனைபாடுகிறது. பழங்கலை இலக்கியங்களின் காதல் வர்ணனைப் போக்குகளை அதிகம் வாசிக்கும் ஈடுபாடு கொண்டவர் என்று இவரது கவிதைகள் காட்டுகிறது.
ஒன்றைப் பார்த்து கவிஞனாக அழகுற சித்தரித்து கவிபாடும் உங்கள் ஆற்றல் வளர்ந்து, தொடர்ந்து கவி பாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நூல் :- மூன்றாவது கண்
எழுத்தாளர் :-இரா. மேரியன்
விலை :- 600 ரூபாய்
எழுத்தாளர்
விமர்சகர்
-ஆதன் குணா –

