உடலை ஆக்ரமிக்கும் உள்ளத்து நோய்
ஊரை வழி கெடுக்கும் பேய்
உற்றார் சுற்றாரை ஒதுக்கும் நாய்
ஊனம் வெப்பமாகி மூலையில் காய்
கண் பார்க்கும் பார்வையை வெறுக்காய்
காது கேட்கும் கேள்வியை மறுக்காய்
மூலை சொல்லும் பதிலை நிராகரிக்காய்
மூக்கை மலர்த்தி சினத்தைக் காட்டுகிறாய்
ஏழை செல்வன் என பிடிக்கிறாய்
ஏங்க வைத்து மனதை வதைக்கிறாய்
தூக்கம் போகாமல் துயரைத் தருகிறாய்
துன்பத்தை தொடர்ந்தும் தொடராக்கி வைக்கிறாய்
வெட்கத்தை தூரமாக்கி கக்கத்தில் வைத்து
வேடிக்கை பார்க்க வைத்தது
வேங்கை போல் மின்னும் கண்ணத்தை
தீயிலிட்டு உருமாற்றி திசை மாற்றும்
பொறாமை உள்ளத்தில் குடிபுகுந்து விட்டால் தன் முயலாமையை தூங்க வைத்து தன் இயலாமையை வெளிகாட்டி விடும்
பேய் ( வெறி)
நாய் ( சுதாடு கருவி)
காய் ( வஞ்சனை அறிவு)
வேங்கை ( பொன்)
பானு ஜிப்ரி
சாய்ந்தமருது