முன்னைய இனவாத அரசாங்கங்கள் செய்யத் தவறியவை.
- பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.
- சட்டத்திற்கு புறம்பான படு கொலைகளுக்கான நடவடிக்கை.
- காணாமல் போனோரைக் கண்டறிதல்.
- அரசியல் கைதிகள் விடுவிப்பு.
- இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தனியார் காணிகளை விடுவித்தல்.
- இடித்து அழித்து இராணுவ முகாம்களாக்கப்பட்ட மாவீரர் மயானங்களை விடுவித்து உறவுகள் நினைவேந்த வழி செய்தல்.
- தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல்.
- ஊடகவியலாளர்களின் படு கொலை, அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுத்தல்.
- மத்திய அரசாங்கத்தினால் பிடுங்கப்பட்ட மாகாண அதிகாரங்களை மீள வழங்குதல்.
- இறுதி யுத்தத்தின் போது இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கான நடுநிலையான விசாரணை.
போன்றவற்றை செயற்படுத்தாமல் இருப்பதே இனவாதக் கண்ணோட்டத்தோடு இந்த விடயங்களைப் பார்ப்பதால்தான்.
எனவே, இதற்கு ஆதரவு கொடுத்த தமிழ் அரசியல்வாதிகள் இதனை வலியுறுத்தி இதற்குரிய தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
குறித்த நிலைமை மேலும் தொடருமாக இருந்தால் சர்வதேச நாட்டு வீதியோரங்களில் நமது நாட்டு அரசு வெள்ளைத்துணி விரிப்பது உறுதி.
அத்துடன், கருணா குழு, பிள்ளையான் குழு, ஈ.பி.டி.பி போன்றவர்கள் செய்த குற்றச் செயல்கள், படு கொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு குற்றம் செய்தவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆகியவற்றிடம் ஆதாரங்கள் உள்ளது.