1815
சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது. இது 12 பணத்திற்கு இணையானது.
1817
கேள்விக் குறைபாடுள்ளோருக்கான முதலாவது அமெரிக்கப் பாடசாலை ஹார்ட்பர்ட் நகரில் தொடங்கப்பட்டது.
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் கிளர்ச்சியைத் தடுப்பதற்காக 75,000 தன்னார்வலர்களைத் திரட்டுமாறு அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கேட்டுக் கொண்டார்.
1865
ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17ஆவது அரசுத் தலைவரானார்.
1892
ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
1896
முதலாவது ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் ஏதென்ஸ் நகரில் இடம்பெற்றது.
1900
பிலிப்பைன் – அமெரிக்கப் போர்: பிலிப்பீனிய ஆயுதப் போராளிகள் அமெரிக்கப் படைகள் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்து, நான்கு நாட்கள் முற்றுகையில் வைத்திருந்தனர்.
1912
இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிமலை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கியதில் மொத்தம் 2,227 பேரில் 710 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
1923
இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.
1936
பாலத்தீனத்தில் அரபுக்களின் கிளர்ச்சி ஆரம்பமானது.
1940
இரண்டாம் உலகப் போர்: நாட்சிகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நோர்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.
1941
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியில் நாட்சிகளின் பேர்கன்-பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.
1969
வட கொரியா அமெரிக்கக் கடற்படை வானூர்தி ஒன்றை ஜப்பான் கடலில் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 31 பேரும் கொல்லப்பட்டனர்.
1970 கம்போடிய உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்ட வியட்நாமிய சிறுபான்மையினத்தவரின் 800 இற்கும் அதிகமான உடல்கள் தென் வியட்நாமின் மேக்கொன் ஆற்றில் மிதந்தன.
1976
தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.
1986
மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5இல் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1989
இங்கிலாந்தின் இல்சுபரோ காற்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 லிவர்பூல் ரசிகர்கள் இறந்தனர்.
1989
சீனாவில் தியனன்மென் சதுக்கப் போராட்டங்கள் ஆரம்பமானது.
1997
மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் உயிரிழந்தனர்.
2002
ஏர் சீனாவின் போயிங் விமானம் தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் உயிரிழந்தனர்.
2013
ஈராக்கில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
2013
அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் பாஸ்டன் மாரத்தான் நிகழ்வில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டனர். 264 பேர் காயமடைந்தனர்.
2014
தெற்கு சூடானில் மத வழிபாட்டிடங்களிலும் மருத்துவமனைகளிலும் தஞ்சமடைந்திருந்த 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.




