1816
பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த பார்படோசுவின் அடிமையான பூசா அடிமைக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிச் சென்று இறந்தார். பார்படோசுவின் முதலாவது தேசிய வீரர் என இவர் மதிக்கப்படுகிறார்.
1828
நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.
1849
அங்கேரி ஆத்திரியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1865
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார். லிங்கன் அடுத்த நாள் இறந்தார்.
1890
அமெரிக்க நாடுகள் அமைப்பு வாசிங்டனில் அமைக்கப்பட்டது.
1894
தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினெட்டாஸ்கோப் என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
1909
உதுமானியரினால் சிலிசியா என்ற ஆர்மீனிய நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 30,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1912
பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் ஏப்ரல் 15 அதிகாலையில் இது 1,503 பேருடன் முற்றாக கடலில் மூழ்கியது.
1915
துருக்கி ஆர்மீனியாவை முற்றுகையிட்டது.
1928
பிரெமென் என்ற ஜேர்மானிய வானூர்தி கனடாவின் கிரீனி தீவை அடைந்தது. கிழக்கில் இருந்து மேற்கே அத்திலாந்திக் பெருங்கடலை வெற்றிகரமாகத் தாண்டிய முதலாவது வானூர்தி இதுவாகும்.
1931
எசுப்பானியப் படைத்தளபதிகள் மூன்றாம் அல்போன்சோ மன்னரைப் பதவியில் இருந்து அகற்றி இரண்டாவது எசுப்பானியக் குடியரசை அறிவித்தனர்.
1940
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய கடற்படையினர் நோர்வேயின் நம்சோஸ் என்ற இடத்தில் தரையிறங்கினர்.
1941
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மானிய இராணுவத் தளபதி இர்வின் ரோமெல் துப்ருக்கை முற்றுகையிட்டான்.
1944
மும்பை துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1958
லைக்கா என்ற நாயை விண்ணுக்குக் கொண்டு சென்ற சோவியத்தின் இசுப்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்றுப்பாதையில் இருந்து வீழ்ந்தது.
1967
ஞாசிங்பே எயதேமா டோகோவின் அரசுத்தலைவர் நிக்கொலாசு குருநித்ஸ்கியை வீழ்த்தி தன்னை புதிய அரசுத்தலைவராக அறிவித்தார். இவர் அடுத்த 38 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தினார்.
1978
ஜோர்ஜியாவில் ஜோர்ஜிய மொழியின் அரசியல் அந்தஸ்தை மாற்றும் சோவியத் ஆட்சியாளரின் முயற்சிக்கெதிராக திபிலீசியில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
1981
கொலம்பியா விண்ணோடம் தனது முதலாவது சோதனைப் பரப்பை முடித்துக் கொண்டது.
1986
வங்காள தேசத்தில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 1 கிலோகிராம் எடையுள்ள ஆலங்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.
1988
சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐ.நா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
1994
ஈராக்கின் வடக்கே இரண்டு ஐக்கிய அமெரிக்க வான்படை வானூர்திகள் தவறுதலாக இரண்டு அமெரிக்க இராணுவ உலங்கு வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1999
யூகொஸ்லாவியாவில் நேட்டோ படைகள் அல்பேனிய அகதிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி ஒன்றின் மேல் குண்டுவீச்சு நடத்தியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1999
அவுஸ்திரேலியா, சிட்னியில் பலமான ஆலங்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
2003
மனித மரபணுத்தொகைத் திட்டம் நிறைவடைந்தது.
2006
டெல்லி, ஜாமா பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 13 பேர் காயமடைந்தனர்.
2010
சிங்காய் நிலநடுக்கம், 2010: 6.9 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,700 பேர் உயிரிழந்தனர்.
2014
நைஜீரியாவில் அபுஜா நகரில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 75 பேர் கொல்லப்பட்டனர், 141 பேர் காயமடைந்தனர்.
2014
நைஜீரியாவில் 276 பாடசாலை மாணவிகள் போகோ அராம் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.




