1829
கொழும்பு, புறக்கோட்டை நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.
1865
ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.
1899
எசுப்பானியா புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளித்தது.
1905
ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
1909
டெல் அவீவ் நகரம் அமைக்கப்பட்டது.
1921
யோர்தான் அமீர் அப்துல்லா புதிதாக உருவாக்கப்பட்ட பிரித்தானியக் காப்பரசான திரான்சுயோர்தானின் முதலாவது அரசை அமைத்தார்.
1945
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் ஜேர்மனிய புக்கென்வால்டு வதைமுகாமை விடுவித்தன.
1955
ஆங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செசு என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர், மூவர் உயிர் தப்பினர். இவ்விமானத்தில் பயணம் செய்யவிருந்த சீனப் பிரதமர் சோ என்லாய் கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்துச் செய்தார்.
1957
பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒப்புதல் அளித்தது.
1961
அடோல்வ் ஏச்மென் மீதான விசாரணைகள் எருசலேமில் ஆரம்பமாயின.
1965
ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் உயிரிழந்தனர்.
1970
அப்பல்லோ 13 விண்கலம் ஏவப்பட்டது.
1979
தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவைக் கைப்பற்றின. உகாண்டா அரசுத்தலைவர் இடி அமீன் நாட்டை விட்டு வெளியேறினார்.
1981
தெற்கு லண்டனில் பிரிக்சுடன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.
1987
இஸ்ரேலுக்கும் யோர்தானுக்கும் இடையே இரகசிய உடன்பாடு லண்டனில் கையெழுத்திடப்பட்டது.
2002
தூனிசியாவில் அல் காயிதா போராளிகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
2002
வெனிசுவேலாவில் அரசுத்தலைவர் ஊகோ சாவெசு பதவி விலகக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 19 பேர் கொல்லப்பட்டனர்.
2006
ஈரானிடம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக ஈரான் அரசுத்தலைவர் மகுமூத் அகமதிநெச்சாத் அறிவித்தார்.
2007
அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.
2011
பெலருஸ் தலைநகர் மின்ஸ்க்கில் மெட்ரோ தொடருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டு, 204 பேர் காயமடைந்தனர்.
2012
இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
2018
அல்சீரியாவில் அந்நாட்டு வான்படையினரால் இயக்கப்படும் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 257 பேர் உயிரிழந்தனர்.




