தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறப்பு குழுவை நியமிக்கும் தீர்மானம் 151 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்று பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி சபைக்கு அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற அமர்வின் போது சிறப்பு விசாரணை குழு அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு கோரப்பட்டது.
அதன்படி, நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ADVERTISEMENT