தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்) சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி தமிழ்ச்சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
தமிழ் தேசத்திற்கு இரண்டாவது சந்தர்ப்பத்தை வழங்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைகிறது .கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் இனவழிப்பு இலட்சிய பற்றுறுதியுடன் பயணித்த எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
Jvpக்கு சம அங்கீகாரம் கொடுத்திருப்பது என்பது மன்னிக்க முடியாத ஒன்று. விடுதலைப்புலிகளின் தலைவரின் இடத்தில் கூட்டங்களை நடாத்துகிறார்கள் அதனையும் மாற்றியமைக்க வேண்டும்.
தூதுவர்கள் எங்களை சந்திக்கும் போது மக்கள் எங்களுக்கு பாடம் படிப்பிக்க தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளதாக குறிப்பிடுகின்றோம். இந்த முடிவை இரண்டாவது இந்த தேர்தலின் முடிவிலும் மக்கள் எடுப்பார்களாக இருந்தால் தாங்களும் வேறு முடிவை கருத்தில் எடுக்க வேண்டி வரும் என தூதுவர்கள் சொல்லியிருக்கின்றார்.
24சதவீத வாக்குகளையே தேசிய மக்கள் சக்தி யாழ் மாவட்டத்தில் பெற்றுக்கொண்டது.
வெளிநாடுகளை பொறுத்தவரையில் இந்த தேர்தல் அனைத்து கேள்விகளுக்கும் முடிவு கொடுக்கின்ற தேர்தலாக பார்க்கின்றார்.
நாடாளுமன்றத்தில் 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும் 10உறுப்பினர்களைக்கொண்ட அறுதிப்பெரும்பான்மை ஒருவருக்கும் இல்லை.
தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்த அந்த முயற்சி சாத்தியப்படவில்லை சீ.வி.கே. சிவஞானத்துடன் பேசிய போது அதற்கு குழு அமைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின்பு சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்பு அந்த விடயம் தேவையில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. தற்போது தமிழரசுக்கட்சி ஆட்சி செய்பவர்கள் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை கொண்டு செல்பவர்கள் சுகந்திரதினம் கொண்டாட எத்தனிப்பவர்களும் சிங்கள கட்சிகளுக்கு இங்கு வைத்து ஆதரவு வழங்குபவர்களும் தான் உள்ளனர்.
நேரத்திற்கு நேரம் முடிவெடுப்பவர் நாங்கள் இல்லை. மீண்டும் நிராகரிக்கப்பட்ட ஒருவர் வந்தவுடன் யாழ்ப்பாணத்தை தோற்கடித்த நபரே அந்த கட்சியை ஆக்கிரமித்துள்ளார். அழிந்து போகும் நிலைக்கு தமிழரசுக்கட்சி
இந்தியப் பிரதமரை சந்திக்கும் போது சமஸ்டியை நாங்கள் வலியுறுத்தினோம். மற்றவர்கள் ஒற்றையாட்சி 13ஐ தான் வலியுறுத்தினார்கள். மக்களிடம் வாக்கு கேட்க வரும் போது சமஸ்டியை சொல்கிறார்கள்.
தமிழர் அரசியல் பாரம்பரியத்தை மதிக்கின்றேன். எமது கட்சி பாரம்பரிய கட்சி என்ற சிந்தனை எனக்கு இல்லை
தமிழரசுக்கட்சி தவிர்க்க முடியாத கட்சி அழிக்கும் தேவை கிடையாது எனக்கு. இந்த தேர்தலில் தமிழரசுக்கட்சி வடக்கு கிழக்கில் தோற்கடிக்கப்படவேண்டும் மக்கள் வழங்குகின்ற ஆணையை தவறான வழிக்கு பயன்படுத்துகின்றனர். தமிழரசுக்கட்சி சார்ந்தோர். ஒரு புள்ளியில் சந்திப்பது என்பது பகல் கனவாகவே உள்ளது. எனக் குறிப்பிட்டார்.





