1820
பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது.
1832
முன்னூறு அமெரிக்கப் படையினர் மிசூரியின் செயின்ட் லூயிசில் இருந்து சவுக் என்ற தொல்குடி அமெரிக்கர்களுடன் போரிடுவதற்காக அனுப்பப்பட்டனர்.
1857
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டார்.
1864
அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.
1866
ஆத்திரியப் பேரரசுக்கு எதிராக இத்தாலியும் புருசியாவும் அணி திரண்டன.
1867
முதலாவது எக்ஸ்போ கண்காட்சி பாரிசு நகரில் ஆரம்பமானது.
1886
வில்லியம் கிளாட்ஸ்டோன் அயர்லாந்தின் சுயாட்சி சட்டமூலத்தை பிரித்தானிய மக்களவையில் சமர்ப்பித்தார்.
1906
ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இறந்தார்.
1911
டச்சு இயற்பியலாளர் எயிக் ஆன்சு மீக்கடத்து திறனைக் கண்டுபிடித்தார்.
1913
அமெரிக்க மேலவைக்கு நேரடித் தேர்தல் நடத்துவதற்கு சட்டமியற்றப்பட்டது.
1918
முதலாம் உலகப் போர்: நடிகர்கள் டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், சார்லி சாப்ளின் ஆகியோர் போருக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
1919
பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டெல்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1924
இஸ்லாமிய நீதிமன்றங்கள் துருக்கியில் இல்லாதொழிக்கப்பட்டன.
1929
இந்திய விடுதலை இயக்கம்: டெல்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.
1942
இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகை: சோவியத் ஒன்றியம் சோவியத் படையினர் லென்ன்கிராதுக்கான தொடருந்துப் பாதையை அமைத்தனர்.
1942
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.
1943
அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தொழிலாளர்களின் ஊதியங்களையும், பொருட்களின் விலைகளையும் முடக்கினார்.
1945
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் அனோவர் நகரில் 4,000 அரசியல் கைதிகளை ஏற்றிச் சென்ற தொடருந்து மீது தவறுதலான வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தப்பியவர்கள் நாட்சிகளால் கொல்லப்பட்டனர்.
1950 – இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1954
கனடிய வான்படை விமானம் ஒன்று திரான்சு கனடா விமானம் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.
1954
தென்னாப்பிரிக்காவின் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.
1960
இரண்டாம் உலகப் போரின் பின்னர் டச்சுக்களினால் கைப்பற்றப்பட்ட ஜேர்மானியப் பிரதேசங்களை 280 மில்லியன் மார்க்குகளுக்கு கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் நெதர்லாந்தும் மேற்கு ஜேர்மனியும் கையெழுத்திட்டன.
1961
பாரசீக வளைகுடாவில் டாரா என்ற கப்பலில் பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 238 பேர் கொல்லப்பட்டனர்.
1970
இஸ்ரேல் விமானங்கள் எகிப்தியப் பாடசாலை ஒன்றில் குண்டுகளை வீசியதில் 46 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1985
போபால் பேரழிவு: போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டது.
1993
மாக்கடோனியக் குடியரசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
2000
அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் உயிரிழந்தனர்.
2004
தார்ஃபூர் போர்: சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.




