1812
பிரித்தானியப் படைகள் வெலிங்டன் பிரபுவின் தலைமையில் படாயோசு கோட்டையைத் தாக்கின.
1814
பிரான்சின் பேரரசர் நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1865
அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் ராபர்ட் ஈ. லீ தலைமையில் தமது கடைசிச் சமரை வடக்கு வர்ஜீனியாவில் நடத்தினர்.
1869
செலுலாயிடு கண்டுபிடிக்கப்பட்டது.
1895
ஆஸ்கார் வைல்டு பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டார்.
1896
1,500 ஆண்டுகளுக்கு முன்னர் உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.
1917
முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
1919
மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.
1930
மகாத்மா காந்தி தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்து வைத்து, கையளவு உப்பை எடுத்து “இதனுடன், நான் ஆங்கிலேயப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்”, என அறிவித்தார்.
1936
ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் உயிரிழந்தனர்.
1941
இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா (யுகோசிலாவியப் படையெடுப்பு) மற்றும் கிரேக்கத்தை (கிரீசு சண்டை) நாட்சி ஜெர்மனி முற்றுகையிட்டது.
1945
இரண்டாம் உலகப் போர்: சாரயேவோ ஜேர்மனிய, குரோவாசியப் படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1965
முதல் தடவையாக புவியிணக்கச் சுற்றுப்பாதையில் இணைக்கப்பட்ட வணிகரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்டெல்சாட் I ஏவப்பட்டது.
1968
அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.
1973
பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1979
நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் மாணவர் போராட்டம் ஆரம்பமானது.
1984
கமரூனின் குடியரசுப் படை பவுல் பியா அரசைக் கவிழ்க்க எடுத்த இராணுவப் புரட்சி முயற்சி தோல்வியடைந்தது.
1992
பொஸ்னியா போர் ஆரம்பமானது.
1994
ருவாண்டா மற்றும் புருண்டி அரசுத்தலைவர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டா இனப் படு கொலைகள் ஆரம்பமானது.
1998
அணுகுண்டு சோதனை: இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.
2005
குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அரசுத்தலைவர் ஆனார்.
2009
இத்தாலியில் ஆக்கிலா பகுதியில் 6.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 307 பேர் உயிரிழந்தனர்.
2010
இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் தந்தேவாடாவில் மாவோயிசப் போராளிகள் 76 மத்திய சேமக் காவல் படை அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.
2012
அசவாத் மாலியில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது.
2018
கனடா, சஸ்காச்சுவான் நகரில் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்.




