1979
இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1829
பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் வாக்களிக்கவும், நாடாளுமன்றத்தில் அமரவும் உரிமை அளித்தது.
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: சம்டர் கோட்டை கூட்டமைப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
1865
அமெரிக்க உள்நாட்டுப் போர்: வட கரொலைனா மாநிலத் தலைநகர் ராலீ அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தது.
1873
ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 60 ஆபிரிக்க அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1919
ஜலியான்வாலா பாக் படுகொலை: அமிருதசரில் ஜலியான்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் கொல்லப்பட்டனர். 1200 பேர் காயமடைந்தனர்.
1930
மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை (வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்) தொடங்கப்பட்டது.
1939
இந்தியாவில் பிரித்தானியர்களுக்கு எதிரான இந்துஸ்தானி லால் சேனை (இந்திய செம்படை) என்ற இராணுவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1941
ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.
1943
இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக ஜேர்மனி அறிவித்தது.
1944
நியூசிலாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பண்ணுறவாண்மை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1945
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியில் கார்டெலகான் என்ற இடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போர், அரசியல் கைதிகள் நட்சிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: சோவியத், பல்கேரியப் படையினர் வியென்னா நகரைக் கைப்பற்றினர்.
1948
எருசலேமில், அதாசா மருத்துவமனையில் இடம்பெற்ற படுகொலைகளில் யூத மருத்துவர்கள், தாதிகள், மாணவர்கள் 78 பேர் கொல்லப்பட்டனர்.
1953
இயன் பிளெமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.
1954
காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்1960 – ஐக்கிய அமெரிக்கா டிரான்சிட் 1-பி என்ற உலகின் முதலாவது செய்மதி இடஞ்சுட்டல் தொகுதியை விண்ணுக்கு ஏவியது.
1970
நிலா நோக்கிச் சென்று கொண்டிருந்த அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிசன் தாங்கி வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது.
1974
ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக புவி நிலைத் துணைக்கோள் வெஸ்டார் 1 ஏவப்பட்டது.
1975
லெபனானில் 27 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு 15 ஆண்டுக்கால உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1976
பின்லாந்தில் வெடிபொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 40 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.1987 – மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.
2003
கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 21 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தனர்.
2012
வட கொரியா ஏவிய ஊனா-3 என்ற ஏவூர்தி வானில் வெடித்துச் சிதறியது.
2017
ஆப்கானித்தான், நங்கர்காரில் அமெரிக்கா மிகப்பெரும் வெடிகுண்டை வீசியது.




