1812
அமெரிக்கத் தலைவர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியத்திற்கு எதிரான 90 நாள் வணிகத் தடையை சட்டமாக்கினார்.
1814
முதலாம் நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை பிரான்சின் மன்னனாக அறிவித்தார்.
1818
13 சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கோடுகளுடனும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நட்சத்திரம் (அப்போது 20) என்றவாறான அமெரிக்கக் கொடியை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.
1841
வில்லியம் ஹென்றி ஹாரிசன் நுரையீரல் அழற்சியினால் காலமானார். பதவியில் இருக்கும் போது இறந்த முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் இவராவார்.
1850
இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
1865
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்குப் பயணம் மேற்கொண்டார்.
1866
ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து மயிரிழையில் தப்பினார்.
1905
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், காங்ரா, தரம்சாலா ஆகிய இடங்களில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1925
ஜேர்மனியில் எஸ்எஸ் காவல்படை என அழைக்கப்படும் சுத்ஸ்டாப்பெல் அமைக்கப்பட்டது.
1933
அமெரிக்கக் கடற்படையின் வான் கப்பல் ஏக்ரோன் நியூ செர்சி கரையில் மூழ்கியது.
1939
இரண்டாம் பைசல் ஈராக்கின் மன்னரானார்.
1944
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய – அமெரிக்கப் படையினரால் புக்கரெஸ்ட் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் குறைந்தது 3,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் ஜேர்மனியில் ஓர்டிரஃப் கட்டாய பணி முகாமை விடுவித்தன.
1945
இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் அங்கேரியை ஜேர்மனியிடம் இருந்து விடுவித்துத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1949
பனிப்போர்: பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.
1960
செனிகல், மற்றும் பிரெஞ்சு சூடானை உள்ளடக்கிய மாலி கூட்டமைப்புக்கு விடுதலை தர பிரான்ஸ் ஒப்புக் கொண்டது.
1968
அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் யேம்சு ரேய் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார்.
1968
நாசாவின் அப்பல்லோ 6 விண்கப்பல் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1969
மருத்துவர் டெண்டன் கூலி உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.
1973
உலக வணிக மையத்தின் இரட்டைச் சிகரங்கள் நியூயார்க்கில் திறக்கப்பட்டன.
1975
மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் கூட்டில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது.
1975
வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் உயிரிழந்தனர்.
1979
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
1981
ஈரான் – ஈராக் போர்: ஈரான் வான்படை 50 ஈராக்கிய வானூர்திகளைத் தாக்கி அழித்தது.
1983
சாலஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
1984
அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்யும் கோரிக்கையை முன்வைத்தார்.
1991
பென்சில்வேனியாவில் உலங்குவானூர்தி ஒன்று ஆரம்பப் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த மேலவை உறுப்பினர் ஜோன் ஐன்சு உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
1999
பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யுகோசுலாவியா மீது குண்டுகளை வீசின.
2002
அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
2009
பிரான்ஸ் நேட்டோ அமைப்பில் மீண்டும் இணைந்தது.
2013
இந்தியாவின் தானே நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் உயிரிழந்தனர்.




