• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தனக்கு எதிராக முகநூல்களில் போலிப் பிரச்சாரம்; மன்னார் பிரதேச சபையின் வேட்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.!

Mathavi by Mathavi
April 2, 2025
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
தனக்கு எதிராக முகநூல்களில் போலிப் பிரச்சாரம்; மன்னார் பிரதேச சபையின் வேட்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.!
Share on FacebookShare on Twitter

என்னுடைய அரசியல் செயற்பாடுகளை தடுப்பதற்காகவும் எனக்கு எதிரான இன ரீதியான பிரசாரங்களை முன்னெடுத்து என் மீது சேறு பூசும் செயல்பாட்டை மன்னார் பேசாலையைச் சேர்ந்த பிரியதர்ஷினி ரொட்ரிகோ என்கிற பெண்மணி முன்னெடுத்து வருவதாக மன்னார் பிரதேச சபையின் வேட்பாளர் இஸ்மாயில் முஹம்மது றிலான் தெரிவித்தார்.

அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் பேசாலையைச் சேர்ந்த பிரியதர்ஷினி ரொட்ரிகோ என்கிற பெண்மணி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகநூல்களில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தான் அரசியல்வாதி ஒருவரின் கீழிருந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல் அண்மையில் முக நூல்களில் என் மீது அபாண்டங்களையும் பொய்களையும் கூறி என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.

இது தொடர்பில் நான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தேன்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரையும், என்னையும் இன்றைய தினம்(2) விசாரணைகளுக்காக பொலிஸார் அழைத்திருந்தனர்.

பொலிஸாரின் அந்த அழைப்பை ஏற்று உரிய நேரத்துக்கு நான் சமூகமளித்திருந்தேன்.

பிரியதர்ஷினி என்கிற அந்தப் பெண்மணி அங்கு வருகை தரவில்லை.

இது தொடர்பாக பொலிஸார், என்னிடம் குறிப்பிட்டார்கள் அந்த பெண்மணி இன்று (2) வரவில்லை என்பதால் நீங்கள் இங்கிருந்து செல்லுமாறும்,தேவையான பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அந்த வகையில் நான் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நான் மன்னார் பிரதேச சபைக்கு வேட்பாளராக போட்டியிடுகிறேன்.

எனவே இந்த பெண்மணியின் நோக்கம் என்னவென்றால் என்னுடைய அரசியல் செயற்பாடுகளை தடுப்பதற்காகவும் எனக்கு எதிரான இன ரீதியான பிரசாரங்களை முன்னெடுத்து என் மீது சேறு பூசும் செயல்பாட்டை இவர் செய்கிறார் என்பது புலனாகிறது.

அந்த வகையில் என் மீது இட்டுக் கட்டப்பட்டு என்னுடைய அரசியல் பாதையை தடுத்து அதன் மூலம் அவர் எதிர்பார்க்கின்ற இலக்கை அடைந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறார்.

எனவே மக்களிடம் வேண்டுவது இவர் தொடர்பில் மிகவும் விழிப்புடன் செயற்படுமாறும், இன ரீதியான பிளவுகளுக்கு இப்படிப்பட்டவர்கள் முன் நின்று செயற்படுவதை எமது மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

தேசிய அடையாள அட்டை இல்லாத முதியவர்களுக்கான விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டம் ஆரம்பம்!

தேசிய அடையாள அட்டை இல்லாத முதியவர்களுக்கான விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டம் ஆரம்பம்!

by selvan
June 28, 2026
0

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தினால், அரசினால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக,...

நீர்நிலைகளில் கவனமாக இருக்கவும்!

நீர்நிலைகளில் கவனமாக இருக்கவும்!

by selvan
June 28, 2026
0

பொசன் பண்டிகை காலப்பகுதியில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...

அதிவேக மற்றும் கவனக்குறைவான சாரதிக்கு நேரடியாக சட்ட நடவடிக்கை!

by selvan
June 28, 2026
0

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக உடனடி அபராதங்களை விதிப்பதற்குப் பதிலாக, நேரடியாகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு...

2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு!

2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு!

by selvan
June 28, 2026
0

2027ஆம் கல்வி ஆண்டு முதல் 6ஆம் தர மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின்...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எபிடகடுவ தெரிவு!

by selvan
June 27, 2026
0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மருத்துவ நிபுணர் சந்திக எபிடகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27)...

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே? – அறிக்கை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்!

by selvan
June 27, 2026
0

மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் அரச தவணைப் பணம் குறித்து அரசு நாடாளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்...

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

by selvan
June 27, 2026
0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

by selvan
June 27, 2026
0

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று(27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

சுரேஷ் சலேவுக்கு திடீர் மாரடைப்பு!

by selvan
June 27, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, திடீரென ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப்...

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

by selvan
June 27, 2026
0

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிகள் மோதும் 9வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் தர்மபுரம் மத்திய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி