நேற்றையதினம் யாழ். சாவகச்சேரி – கச்சாய் வீதி பகுதியில் இரண்டு திருநிறைச் செல்விகளுக்கு பிரமாண்டமான முறையில் மஞ்சள் நீராட்டு விழா நடாத்தப்பட்டது. சுஜேந்திரன் பாணுமதி தம்பதிகளின் லக்சிகா, டிலக்சனா என்ற இரண்டு சகோதரர்களுக்கே இவ்வாறு பிரமாண்டமான முறையில் மஞ்சள் நீராட்டு விழா நடாத்தப்பட்டது.
ஆரம்பத்தில் இரு திருநிறைச் செல்விகளும் பெரியப்பாவின் இல்லத்தில் இருந்து பல்லக்கில் ஏற்றி தவில் நாதஸ்வரம் இசைக்க, மயிலாட்டம், ஒயிலாட்டம், குதிரையாட்டம், பொம்மலாட்டங்களுடன் அவர்களது இல்லம்வரை அழைத்து வரப்பட்டனர். அதன்பின்னர் மணவறையில் சம்பிரதாய பூர்வ நிகழ்வுகள் இடம்பெற்றன.
ADVERTISEMENT




