மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் இயங்கிவரும் EWINGS பெண்களுக்கான சுதந்திர அமைப்பினால் “பெண்களும் மைதானத்தை பயன்படுத்தும் உரிமை உண்டு” என்ற கருப்பொருளில் வருடந்தோறும் கிராமமட்ட பெண்கள் அமைப்பிற்கிடையில் நடாத்தப்படும் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இம்முறை 7 அணிகள் பங்கு பற்றிய போட்டியொன்று திருகோணமலை மக்கேய்சர் பொது விளையாட்டு மைதானத்தில் (22) இடம்பெற்றது.
இதில் இலுப்பைக் குளத்தை பிரதிநிதித்துவபடுத்தி பங்குபற்றிய victory அணியினர் வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தனர். இதன்போது வெற்றியீட்டிய அணியினருக்கு கேடயங்களும் பரிசில்களாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக பெண்கள் சிறுவர்கள் பொலிஸ்பிரிவின் பொறுப்பதிகாரி A.N.ஜெயமாலி மற்றும் சட்டத்தரணி பிரபாலினி குலசேகரன் , ஈவின்ங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி காயத்திரி நளினகாந்தன், மேக்கன்டைன் வங்கி நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


