திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை நேற்று (20) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது.
இதன்படி 126 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 12 சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுக்களை நேற்றையதினம் வரை தாக்கல் செய்திருந்தது.
அதில் 23 அரசியல் கட்சிகளினதும் 03 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான W.G.M ஹேமந்த குமார தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் இம்முறை தேர்தலில் போட்டியிட 103 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் மற்றும் 9 சுயேட்சை குழுக்களும் போட்டியிட தகுதி பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.