உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறக்கப்படும் பெண் வேட்பாளர்களுக்காகக் காடுமேடெல்லாம் தேட வேண்டிய அவசியம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்படவில்லை என்று அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை யாழ்ப்பாணத்தில் நேற்று தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குச் சுமந்திரன் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களைக் கண்டடைய காடுமேடெல்லாம் தேடியதான சுமந்திரனின் கருத்துக் குறித்து ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த முறை காடுமேடெல்லாம் பெண் வேட்பாளர்களைத் தேட வேண்டி இருக்கவில்லை.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இம்முறை பெண் வேட்பாளர்களுக்காக காடுமேடெல்லாம் அலைய வேண்டிய தேவை இருக்கவில்லை.” – என்றார்.