மத்திய நெடுஞ்சாலையில் பாரவூர்தியுடன் வேன் மோதியதில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் நேற்று இரவு(18) உயிரிழந்துள்ளார்.
களனி பல்கலைக்கழக தத்துவ ஆய்வுகள் துறையின் உளவியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றும் டி. குணேந்திர கயந்த (46) என்பவர் யாழ்ப்பாணத்திற்கு குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்று திரும்பி வரும் போது மத்திய நெடுஞ்சாலையில் பாரவூர்தியுடன் அவர்கள் பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த அவரது மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் இரண்டு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

