2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று (17) காலை 8.30 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் ஆரம்பமானது.
தொடர்ந்து 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை அலுவலக நேரங்களில் வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் நடைபெறும்.
வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

