மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.நளீம் தலைமையில் ஏறாவூர் நகர், ஏறாவூர்ப்பற்று நகரசபை, பிரதேசசபைக்கான கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டது.
இதேபோன்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் திலீப் தலைமையில் வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, வாகரை ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து சர்வஜன பலய கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் ஷாபி தலைமையில் செலுத்தினர்.





