மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடி, ஊர் வீதி, முகைதீன் தைக்கா பள்ளி வாயல் பேஷ் இமாம் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மௌலவி எம்.எஸ்.எம். ஸபீர் என்பவரே உயிர் இழந்துள்ளார்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அரச போக்குவரத்து பேருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது உந்துருளியில் பின்பக்கம் இருந்துவந்த பார்வையற்ற விசேட தேவையுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது உந்துருளியை செலுத்திய நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.