இலங்கை கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரை இந்திய மீனவர்கள் நட்புறவின்பால் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் திருநாள் திருப்பலி நேற்றையதினம் (15) காலை 9 மணியளவில் நிறைவடைந்தது இதனை தொடர்ந்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் கூட்டமைப்பின் சங்கத்தினர் குழாம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடினர்.
தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா மற்றும் சங்கப் பிரதிநிதிகளால் பொன்னாடை போர்த்தி அமைச்சர் கௌரவிக்கப்பட்டார்.


