கனகராயன்குளம் குறிசுட்ட குளத்தில் நேற்று இரவு(14) சில வீடுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கனகராயன்குளம் குறிசுட்ட குளத்தில் உள்ள சில வீடுகளில் தொலைபேசி மற்றும் தங்கநகை திருட்டில் ஈடுபட்ட போது அகிலன் குழுவினரால் சுற்றிவளைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டு நன்றாக கவனிக்கபட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக கனகராயன்குளத்தில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.



