இந்தியாவில் 3 ஆவது குழந்தை பெற்றடுத்தால் 50,000 ரூபா நிலையான வைப்புத்தொகையும் ஆண் குழந்தைக்கு ஒரு பசுவுடன் கன்றும் வழங்கப்படும் ஆந்திர நாடாளுமன்ற உறுப்பினர் அப்பல்லா நாயுடு என்றும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆந்திரா விஜயநகரம் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பல்லா நாயுடு தெரிவிக்கையில், தனது தொகுதியில் மூன்றாவதாக பெண் குழந்தை பெற்றால் நிலையான வைப்புத்தொகை 50,000 ரூபாயும், அதுவே ஆண் குழந்தை பெற்றால் பசுவும் கன்றும் வழங்கப்படும்.
இதன் மூலம் இந்திய மக்கள் தொகை உயர வேண்டும். தனது வாழ்க்கையிலும் அரசியலிலும் பல பெண்கள் தனது முடிவை ஊக்குவித்துள்ளனர். சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்துரைத்தார்.
மேலும் பெண்களை ஊக்குவிப்பது காலத்தின் தேவை என்றும் வலியுறுத்தினார். இதன் மூலம் நிலையான வைப்புத்தொகை 10 லட்சம் ரூபாவாக வளரும் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இது தொடர்பாக தெரிவிக்கையில், தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.