புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் கடந்த 08.03.2025 அன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த இனம் தெரியாத நபர் மிளகாய்தூளை தூவிவிட்டு வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் 5,95,000 பெறுமதியான தங்கச்சங்கிலியை திருடி சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கபட்ட நபர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து பொலிஸாரின் தொடர் தேடலில் குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபரை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத் தலைமையில் பொலிஸ் சார்ஜன்களான (54721) பிறேமதிலக், (8584) புவிசந்திரன், (36841) குமார ஆகிய பொலிஸ் குழுவினரால் நேற்றையதினம் (12.03.2025) புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 34 வயதுடைய குறித்த சந்தேக நபரை விசாரணைகளின் பின் நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 25.03.2025 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.