அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலெஸ்ஸ, அபேசேகர பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (13) காலை இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் அபேசேகர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்ஷான் எனும் இளைஞன் ஆவார்.
குறித்த இளைஞனின் சடலத்திற்கு அருகில் இருந்து உந்துருளி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.