வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் இன்று (12) சிறுவர்களுக்கான சந்தை நடைபெற்றது.
சென்மேரிஸ் முன்பள்ளி தலைமை ஆசிரியரின் வழிநடத்தலில் முற்பகல் 09.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது.
இச் சந்தையில் மாணவர்கள் தமது கைத்தறிமுறைப் பொருட்கள், இனிய உணவுப் பதார்த்தங்கள், மற்றும் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட கைவினைப் பொருட்களை அசத்தலாகக் காட்சிப்படுத்தினர்.
சிறுவர்களின் சொந்த முயற்சியில் உருவான இவை, அவர்களின் ஆற்றல், திறமை, மற்றும் புதுமையான சிந்தனைகளுக்கு சான்றாக இருந்தன.
இச்சந்தையில் பெற்றோர்களும் கிராம மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், சிறுவர்களின் முயற்சிகளை பாராட்டினர்.
குறுகிய நேரத்தில் கைத்தறிப் பொருட்கள் விற்பனையானதுடன், சிறுவர்களின் விற்பனைத் திறமையும் புகழப்பட்டது.
இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி நிர்வாகத்தினர், கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,
கிராம அபிவிருத்தி சங்க தலைவர், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



