அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் பெண் மருத்துவரை துஷ் – பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்தார்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் நேற்று பயிற்சி மருத்துவராகப் பணியாற்றும் தமிழ் பெண் மருத்துவர் பணி முடித்துதங்கும் விடுதிக்கு செல்லும்போது, சந்தேகநபர், வாய்க்குள் துணியை திணித்து கை கால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணை துஷ் – பிரயோகம் செய்து, அவரை வீதியில் விட்டு சென்றுள்ளார்.
குறித்த தமிழ் பெண் மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாத நிலையில் மருத்துவ நிர்வாகம் பணிப்புறக்கணிப்பு என அறிவித்துள்ளது. பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன. பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
இதே நேரம் இச்சம்பவத்தை செய்த சந்தேக நபர் இராணுவத்தை சேர்ந்தவர் என அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது என தகவல் அறியக் கூடியதாகவுள்ளது.